மனு எண்:

பட்டா கேட்டல் சம்பந்தமாக மனு.

அனுப்புநர் :
திரு.என்.ராஜேஸ்வரன்,
பிளாட் எண்.17, தந்தை பெரியார் 2வது தெரு,
அண்ணாநகா்,
மதுரை-18

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேற்படி அண்ணாநகா், பாத்திமா கல்லூாரி எதிர்புறம் உள்ள அண்ணாநகா் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுமையான வரி செலுத்திய பின்பும், நீண்ட காலமாக பட்டா வழங்கவில்லை. பலமுறை முயற்சித்தும் பலனில்லை. ஆகவே, மேற்கண்ட பகுதிக்கு பட்டா வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “பட்டா கேட்டல் சம்பந்தமாக மனு.”

  1. tnscbmadurai says:

    மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதி தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசிடமிருந்து வாரியத்திற்கு நிலமாற்றம் செய்யப்பட்டவுடன் வாரியம் கோரும் தொகையை செலுத்திய பயனாளிகளுக்கு பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் தற்பொழுது பத்திரப்பதிவு செய்து வழங்க இயலாது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.