மனு எண்:

மின்பற்றாக்குறையை சரிசெய்ய கேட்டல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அல்லிகுண்டம் கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அல்லிகுண்டம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரனமாக பொருவாரியான தெருமின்விளக்குகள் எரியாமலும் குடிநீர்மோட்டார்கள் இயங்காமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகெள்கிறோம்

2 Responses to “மின்பற்றாக்குறையை சரிசெய்ய கேட்டல்”

  1. semtnebmdu says:

    அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டதில் போதுமான அளவு மின்னழுத்தம் இருப்பதால் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

  2. semtnebmdu says:

    அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டு தேவைப்படின் புதிய மின்மாற்றி ‌அமைக்க மதிப்பபீடு தயார் செய்யப்பட்டு உரிய ஒப்புதல் பெறப்பட்டவுடன் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.