மனு எண்:

அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
உச்சப்பட்டி கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் உச்சபட்டி அகதிகள் முகாமில் தங்கியுள்ளேன். (அடையாள அட்டை எண்.0989) நான் கடந்த 2005ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ரத்ததானம் மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எனது சேவையைப் பாராட்டி திருப்பரங்குன்றம் பேஷன் அாிமா சங்கம் என்னை அவர்களோடு இணைத்துக்கொண்டது. எனது சேவையைப் பாராட்டி இந்து நாளிதழ் 10.11.2011 அன்றைய நாளிதழும் என்னை ஊக்கப்படுத்தி கட்டுரை வெளியிட்டது.
அய்யா, தாங்கள் தரும் அனுமதியால் முகாம்களில் வாழும் ஈழ மக்களிடம் தானங்களில் சிறந்ததான ரத்ததானம் மற்றும் கண்தானம் குறித்த சிந்தனையையும் செயலையும் வெளிக்கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். எனவே கருணை கூர்ந்து இந்த சேவைக்கு அனுமதி வழங்கும்படி தங்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

One Response to “இலங்கை அகதிகள் முகாம்களில் ரத்ததானம் மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரல்”

  1. tvmadmin says:

    மேற்கண்ட ‌ கோரிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.