மனு எண்:

உதவித்தொகை வழங்க வேண்டி மனு

அனுப்புநர் :
மழுவேந்தி
184-32 தேவன்பெருமாள்பட்டி
அம்பலகாரன்பட்டி அஞ்சல்)
மேலூர் வட்டம்.
மதுரை-109.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேலே கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு பையனுக்கு காது கேட்காததால் பேச்சு வரவில்லை. ஆதலால் ஊனமுற்றறோர் உதவித்தொகை வழங்குமாறு கணம் மாவட்ட ஆட்சியர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “உதவித்தொகை வழங்க வேண்டி மனு”

  1. dadromdu says:

    மனுதார்க்கு வயது மூன்று காது கேளாதேரர் மற்றும் வாய்பேசாதேரர் தமிழக அரசின் மூலம பத்தாம் வகுப்பு வரை விருதுநகரில் மாவட்டம் சுலக்கரையில் உள்ள அரசு கா‌துகேளாதேரர் பள்ளியில் மனுதாரருக்கு இலவச உணவு, உடை மற்றும் விடுதி வசதியுடன் கூடிய கல்வி பயில அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே 2012-2013 நிதியாண்டில் மேற்கண்ட மாணவனை சேர்ப்பதற்கு இவ்வலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  2. tvmadmin says:

    மனுதாரர் தனது ஊனமுற்ற மகன் பெயரில் உதவித்தொகை கோரியுள்ளார். மனுதாரது மகனுக்கு 3 வயது மட்டுமே ஆவதால் மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலரிடம் பராமரிப்பு தொகை கோரி விண்ணப்பம் செய்து கொள்ள மனுதாரர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.