மனு எண்:

அனுப்புநர் :
அ. ரவிச்சந்திரன்,பி.ஏ.,
ஊராட்சி மன்ற துணைத்தலைவா்,
அாிட்டாபட்டி
மேலுார் தாலுகா

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்கள் ஊரில் புராதானச் சின்னங்களான மகாவீரா் சிலை, புத்தா் சிலை, சமணா் படுக்கைகள், ஏழாம், எட்டாம் நுாண்றாண்டைச் சோ்ந்த பாண்டியன் குடைவரைக் கோவில்கள், பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற மன்னனின் பெயா் தோன்ற காரணமாக இருந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பிரிட்டீஸ்காரா்களின் நீா்த் தேக்ககங்கள் போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளது. எங்கள் ஊரில் ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனா். ஆகையால் ஐயா எங்கள் ஊரை தாங்கள் பார்வையிட்டு சுற்றுலா தளமாக மாற்றும்படி வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
அ. ரவிச்சந்திரன், பி.ஏ.,
ஊராட்சிமன்ற துணைத்தலைவா்,
அரிட்டாபட்டி

One Response to “சுற்றுலாத்தளமாக மாற்றக் கோருவது – தொடா்பாக.”

  1. mgrhottnmdu says:

    சமணர் படுகைகள் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் இடம்பெற்றுள்ள இடங்களை மேம்படுத்துதல் தொடர்பாகவும் சுற்றுலா தளங்களாக மாற்றுவது தொடர்பாகவும் கடந்த 7.3.2012 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் தொடர்ச்சியாக மேற்கண்ட திட்டத்திற்கு மதிப்பீடு தயார்செய்து அனுப்ப பேரூராட்சி உதவி இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.