மனு எண்:

அனுப்புநர் :
ஜி. மாாியப்பன்.
மாவட்ட செயலாளர்
1ஃ8 அக்கைய நாயக்கர் தோப்பு காட்டுநாயக்கன் தெரு. ஒத்தப்பட்டி,மதுரை 16

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை ஒத்தப்பட்டி, அக்கயநாயக்கன் தெருவில் நடை பெற்ற காட்டுநாய்கன் இன மக்களின் படித்த குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்தும் வகையில், சீருடை, புத்தகங்கள், ஊக்கபாிசுகள் வழங்கி ஒரு மாத காலத்திற்குள் சான்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று உறுதியளித்த மாவட்டட ஆட்சியர் கோட்டாட்சியர் அவர்களிடம் 50 பேர்களுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வேண்டி மனுக்கள் கொடுத்தோம். மதுரை மாநகாில் மற்ற பகுதிகளில் வசித்துவரும் இந்து காட்டுநாயக்கன் இன மக்களுக்கு சான்றுகள் வழங்கியுள்ள நிலையில் எங்களுக்கும் வழங்காததை கேட்டு மாண்புமிகு டாக்டர் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 30.1.2012 அன்று மதுரை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு சமர்பித்துக்கொள்கிறோம்.

One Response to “இந்து – காட்டு நாயக்கன் சாதச் சான்றுகள் மனைப்பட்டா அரசு நலத்திட்டங்கள் மதுரை, ஒத்தப்பட்டி பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு வழங்காமல் காலம் காழ்த்தி வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மாண்புமிகு டாக்டர் முதல்வர் அம்மா, அவர்கள் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டும், 30.1.2012 அன்று மதுரை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மதுரை மாவட்டட இந்து காட்டு நாயக்கன் இன மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தொடர்பாக.”

  1. rdomdu says:

    ந.க 439-12-எல் நாள் 24.1.12
    மனுதாரர் ”இந்து-காட்டுநாயக்கன்” சாதி சான்றிதழ் வழங்க கோரும் மேற்படி 50 நபர்களின் பெயர் மற்றும் முகவரியினை தனித்தனியாக தெரிவித்து மனுச் செய்யுமாறு மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    வருவாய் கோட்டாட்சியர், மதுரை.