- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஆட்சேபணை மனு மின் கம்பம் செல்வதை மாற்றி யமைப்பதை ஆட்சேபணை தொடா்பாக.

மனு எண்: தொடுவானம்/7918/09/01/2012
துறை: செயற் பொறியாளர் - மின்சாரம் - கிராமம்
கிராமம்:

அய்யா,
ஆணையுா் கிராமம், குலமங்கலம் கிராமத்தில் 3வது வார்டு,எனக்கு சொந்தமான இடமான புலஎண்.242ஃ1ன் வழியாக மின்கம்பங்களை கொண்டு செல்வதற்கு எனது அனுமதியில்லாமல் திரு.அம்மாக்கண்ணு என்பவர் அனுமதி கேட்டு  கொடுத்துள்ள மனுவின் பேரில் மின்சார வாரியம் அனுமதி கொடுத்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஆட்சேபணை மனு மின் கம்பம் செல்வதை மாற்றி யமைப்பதை ஆட்சேபணை தொடா்பாக."

#1 Comment By prometromdu On February 2, 2012 @ 11:22 am

This petition is related to Superintending Engineer/ Rural /Madurai

#2 Comment By prometromdu On February 2, 2012 @ 11:34 am

மேலே குறிப்பிட்ட மனு மேற்பார்வை பொறியாளர்ஃஊரகம்ஃமதுரை வட்டத்தை சார்ந்தது.

#3 Comment By semdu On February 9, 2012 @ 3:04 am

பொதுவாக அனைத்து மின் இணைப்புகளும் 50மீ தூரம் வரை அருகில் உள்ள் மின் கம்பத்திலிருந்து மட்டுமே இணைப்பு வழங்கப்படும்.எனவே கூடுதல் மின் கம்பம் தங்களது விருப்பத்தின் பேரில் அமைக்கப்பட வேண்டும் எனில்,DCW மனுதாரர் பங்களிப்பு திட்டத்தின் கீழ் தாங்கள் உரிய மதீப்பீட்டு தொகையை செலுத்தும் பட்சத்தில் மட்டுமே அமைக்க இயலும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

#4 Comment By semdu On February 9, 2012 @ 3:18 am

மனுதாரரின் அனுமதி்யின்றி மனுதாரருடைய சொந்த பட்டா இடத்தின் வழியாக மின் கம்பிகளை வேறு இடத்திலிருந்து மாற்றியமைக்கப்படாது என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7918/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%aa%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-2/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.