மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அய்யாபட்டி கிராமம்,
ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். நான் நான்கு பெண் குழந்தைகளை வைத்து கஸ்டப்பட்டு வருகிறேன். வறுமை கோட்டிற்கு கீழ் பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளது. வறுமைக் கோட்டு பட்டியல் எண்:3044 ஆகும். ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா அவர்கள் கருணை கூர்ந்து எனக்கு கான்கிரீட் வீடு வழங்குமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

பி.போதுமணி.

2 Responses to “பசுமை கான்கிரீட் வீடு வழங்குவது – சம்பந்தமாக.”

  1. bdokotmdu says:

    பி.போதுமணி என்ற பயனாளி அய்யாபட்டி ஊராட்சியில் வசிக்கவில்லை என்ற விபரம் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மனுவில் தெரிவித்துள்ள வறுமை கோட்டு கீழ் வாழும் பயனாளி பட்டியல் எண்.3044 என்பது அவ்வூராட்சிக்கு வழங்கப்படவில்லை.ஆதலால் பசுமை வீடு ஒதுக்கீடு செய்ய இயலாத நிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர்,கோட்டம்பட்டி/ஊரக வளர்ச்சித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்,கோட்டம்பட்டி அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்