- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

செங்கல் காளவாசலுக்கு ம்ண் அள்ளுவது தொடர்பாக‌

மனு எண்: தொடுவானம்/7856/30/12/2011
துறை: துணை இயக்குநர் (கனிமம்)
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: கு.பாண்டியராஜன் த/பெ குருசாமி மதுரை மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற இணைச் செயலாளர்,பழையூர்,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் பேரையூர்,சிலைமலைப்பட்டி,பழையூர்,து.கிருஷ்ணாபுரம்,வண்டாரி,சூலப்புரம்,எழுமலைப் பகுதிகளில் சுமார் 500 செங்கல் காளவாசல்கள் உள்ளது.இக்காளவாசலில் சுமார் 7500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றார்கள்.மூலப் பொருளான மண் அள்ளுவதற்கு அரசு தற்போது தடைவிதிக்கபட்டுள்ளது.இதனால் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.இதனால் பலஆயிரம் தொழிலாளர்கள் சாப்பாடு இன்றித் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.மேலும் இதே நிலை நீடித்தால் அரசு வழங்கியுள்ள இலவசவீடுகளுக்கு செங்கல் வழங்குவதும் தடையாகும் எனவே மண் அள்ளுவதற்கு டிராக்டர் வண்டிகளுக்கும்,காளவாசலுக்கும் ஒரிரு வாரங்களில் கலால்துறை மூலம் அனுமதி வழங்குமாறும் அதுவரைக்கும் கலால் துறை அதிகாரிகளுக்கும்,காவல்துறை அதிகாரிகளுக்கும்,வருவாய்துறை அதிகாரிகளுக்கும்,வனத்துறை அதிகாரிக்களுக்கும்,காளவாசலுக்கு மண் அள்ள அனுமதி கொடுக்குமாறும் அவர்களுக்கு ஆணை பிறபிக்குமாறும் உங்களை அன்புடன் கேட்டுக் கொண்டு ஏழைமக்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "செங்கல் காளவாசலுக்கு ம்ண் அள்ளுவது தொடர்பாக‌"

#1 Comment By madurai On December 30, 2011 @ 12:12 pm

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், பெரையூர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், பெரையூர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By ddminmdu On February 8, 2012 @ 9:26 am

மனுதாரர் தெரிவித்துள்ள பகுதிகளில் 20 நபர்களுக்கு மண் எடுக்க அனுமதியும், 160 நபர்களுக்கு காளவாசல் நடத்துவதற்கு பதிவு சான்றும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற விபரமும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7856/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a3/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.