மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
காயாம்பட்டி கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராமமக்கள் குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு படும்சிரமத்தினை கருத்திற்கொண்டு பகுதி நேரநியாயவிலைக்கடை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்குஓராண்டுக்குமுன்
மனு செய்திருந்தோம்.இம்மனுகூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டு பின்குலமங்கலம் ஊராட்சித்தலைவர் அனுமதிபெற்று நாடகமேடையில் கடைஅமைத்து்த்தரக் கோரிகுலமங்கலம் தொ டக்க வேளாண்மைகூட்டுறவுகடன் சங்கம்வழியாகஉரியபிரேரனண அனுப்பப்பட்டு ஓராண்டு கடந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இக்கிராமமக்கள் மிகவும் வரியநிலையில்அரசு கட்டித் தந்துள்ளஇலவச குடியிருப்பிகளில்குடியிருந்துவருகிறோம்.எனவேநியாய
விலைக்கடை அமைப்பதற்கு இடமளிக்க இயலவில்லை நாடகமேடைக்கு அனுமதிஇல்லை எனகூறப்பட்டதால் திரு.சின்னசாமி என்பவர் மின்வசதி உள் ள தனதுஓட்டு வீடு எழுதிக் கொடுத்துள்ளார்.கடைஅமைத்துத்தரவேண்டுகிறோம்

2 Responses to “”

  1. jrcoopmdu says:

    பிரேரணை பெறப்பட்டுள்ளது. ்மாவட்ட ்ஆட்சியருக்கு அனுமதி வேண்டி பிரேரணை ‌அனுப்பப்பட உள்ளது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கூட்டுறவு இணை பதிவாளர்/கூட்டுறவுத் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டுறவு இணை பதிவாளர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்