- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

நில மோசடி செய்தது தொடர்பாக

மனு எண்: தொடுவானம்/7843/28/12/2011
துறை: காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.
கிராமம்: ,மறவன்குளம்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
மறவன்குளம் கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்

அய்யா
66 நல்லுார் கிராமம் பட்டா எண் 296 சர்வே எண் 280-2 உள்ள நிலத்தைமோசடியாக விற்றுவிட்டனர் நிலத்ததை மீட்டு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
லட்சுமி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "நில மோசடி செய்தது தொடர்பாக"

#1 Comment By madurai On December 29, 2011 @ 10:28 am

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர், மதுரை தெற்கு /வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர், மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By spmdu On March 14, 2012 @ 8:18 am

ஜி3-6126-12 நாள். 14.03.12 மறவன்குளம் கிராமம் சென்று இம்மனுவில் கண்ட லட்சுமி என்ற பெயர் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பெயரில் பலபேர் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க தாங்கள் யாரும் மனு போடவில்லை என்றும் மேலும் நல்லுர் கிராம பட்டா மற்றும் சர்வே மனுவில் கண்ட நிலம் ஏதும் மறவன்குளம் சரகத்தில் இல்லை என்றும் அது சம்பந்தமாக எழுதிக் கேட்டதில் ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி நாங்கள் யாரும் இம்மனுவை போடவில்லை என்றும் அதனால் எழுதிக் கொடுக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். ஆகையால் இம்மனுவில் நடவடிக்கை இல்லை. மனு தள்ளுபடி.

காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7843/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.