மனு எண்:

நிதி ஒதுக்கீடு கோருதல் தொடர்பாக

அனுப்புநர்: பி. லெட்சுமி
நாச்சிகுளம் கிராமம்,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்

அய்யா
எங்கள் ஊரில் கழிப்பறை சிமெண்ட் சாலை கழிவுநர் வாய்க்கால் போன்றவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

2 Responses to “நிதி ஒதுக்கீடு கோருதல் தொடர்பாக”

 1. bdovadmdu says:

  வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் ‌சார்ந்த நாச்சிகுளம் கிராமத்தில் பெண்கள் கழி்ப்பறை பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கு மராமத்து செய்யப்பட்டு வருகிறது.
  மேற்படி ஊராட்சியில் சுமார் 800 வீடுகளில் தனிநபர் கழிப்பறை நல்லமுறையில் இயங்கி வருகின்றது. மேலும் புதிதாக கழிப்பறை கட்ட 2012-2013ம் ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  மேற்படி ஊராட்சியில் தெருக்களில் சிமி்ண்ட சாலை அமைக்க 2011-2012ம் நிதியாண்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 200000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நிதியாண்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 2. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர், ஊராட்சிகள்/ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சிகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநர், ஊராட்சிகள் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்