மனு எண்:

அனுப்புநர்: பி. ஜெயராமன்
தஃபெ. பொன்னுச்சாமி
கிழக்குத்தெரு சோணைகோவில் தெரு
கொடிமங்கலம்
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனக்கு சொந்தமான கொடிமங்கலம் கிராம பட்டா எண்.524- இடத்தில் உள்ள மேடான பகுதியில் உள்ள மண்ணை, விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாக பட்டா எண்.458 கொண்ட புஞ்சை நிலத்தில் கொட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் நம்பிக்கையுள்ள
பி. ஜெயராமன்.

One Response to “மண்‌ணை அள்ளி வேறு இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி வேண்டி”

  1. ddminmdu says:

    மனுதாரர் மேற்கண்ட பட்டா நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரத்துடனும், வரைபடம், டெபாசிட் தொகை செலுத்தியதற்கான சலான் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடனும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன்பேரில் கனிம விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரமும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.