மனு எண்:

கண்மாய் மராமத்து பணி மேற்கொள்ளுதல்

அனுப்புநர்: து.‌சேது
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்,
(ஐக்கிய விவசாயிகள் சங்கம்)
சோழவந்தான்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்.

வாடிப்பட்டி வட்டத்திலுள்ள தென்கரை கண்மாய் துார் வராமல் இருப்பதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே மேற்படி கண்மாய் துார் வாரி கரைகளை வலுப்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
து.சேது

2 Responses to “கண்மாய் மராமத்து பணி மேற்கொள்ளுதல்”

  1. executive engineerperiyar vaigai basin division says:

    தென்கரை கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாயினை சீரமைக்கும் பணிக்காக பாரம்பரிய கண்மாய்த்திட்டத்தில் (Traditional Water Bodies) மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், குண்டாறு கோட்டம்/பொதுப்பணித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளர், குண்டாறு கோட்டம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்