- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

அவனியாபுரம் தொகுப்பு வீட்டில் வீடு ஒதுக்கி தரக் கேட்டல் தொடர்பாக.

மனு எண்: தொடுவானம்/7750/15/12/2011
துறை: செயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்)
கிராமம்:

அனுப்புநர்: கே.ஜெ. சாந்தாராம்,
த-பெ‌. கே.ஆர்.ஜெயராம்,
14-ஏ மணிமேகலை தெரு,
(வாசுகி தெரு) கணபதி நகர்,
வில்லாபுரம், மதுரை-12.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் வசிக்கும் 150 பேர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களுக்கு அவனியாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள காலியாக உள்ள தொகுப்பு வீடுகளில் வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கே.ஜெ.சாந்தாரம்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "அவனியாபுரம் தொகுப்பு வீட்டில் வீடு ஒதுக்கி தரக் கேட்டல் தொடர்பாக."

#1 Comment By madurai On December 29, 2011 @ 11:46 am

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணைப்பதிவாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்/வீட்டு வசதி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By tnscbmadurai On January 25, 2012 @ 7:59 am

மதுரை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட ஆட்சேபகரமான அரசு மற்றும் நீர்நிலைபுறம்போக்குகளில் ஆக்கிரமித்து வசித்துவரும் குடிசை குடியிருப்புகள் அகற்றப்பட்டு அவர்களில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு சமப்நதப்பட்ட துறையின் பரிந்துரை பெற்று வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் தங்களுக்கு வீடு வழங்க இயலாது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7750/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.