மனு எண்:

ரேஷன் கார்டு வேண்டி

அனுப்புநர்: செல்லையா த/பெ மகாலிங்கம் அப்துல்கலாம் தெரு,பழையூர்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நான் வசிக்கிறேன்,எனக்கு வயது82 ஆகின்றது.என்னுடைய மனைவி,மகள் என்னுடன் வசித்து வருகின்றார்கள் நான் உடல்நிலை சரியில்லாதகாரணத்தால் ஆஸ்பத்திரி சென்றுவிட்டேன் அன்றைய தினம் பருப்பு,சீனி,ரேசன் கடையில் விநியோகம் செய்து கொண்டு இருந்தார்கள் என்னுடைய குடும்ப அட்டையை என்னுடைய பேத்திமுனியம்மாள் கொண்டு சென்று கடைக்கு பொருள் வாங்கினாள் அப்போது riவந்து ஆய்வு செய்துஅங்கிருந்த கார்டுகளை வாங்கிச் சென்றுவிட்டார்கள்,மறுநாள் அனைவருக்கும் குடும்ப அட்டையை வழங்குவிட்டார்கள்.நான் ஆஸ்பத்திரியை விட்டு வந்துகேட்டபொழுது இரண்டு நாள்கழித்து வாருங்கள் எனக் கூறினார்,நான்09/2011,12/2011 வரை சுமார் 14முறை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வந்தேன் ஆனால் கார்டு கிடைக்கவில்லை நான் அரிசி இல்லாத காரணத்தினால் சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கிறேன் என்னுடைய குடும்பஅட்டையை பெற்றுதர தாங்கள் ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.குடும்ப அட்டை எண் 24/g/0437976.

3 Responses to “ரேஷன் கார்டு வேண்டி”

 1. madurai says:

  பேரயூர் வட்டம் பழையூர் முகவரியைச் சேர்ந்த திரு.மா.செல்லையா என்பவரது குடும்ப அட்டையை பயன்படுத்தி வேறு நபர் பொருள் வாங்கியதன் காரணமாக மேற்கண்ட குடும்ப அட்டை குடிமைப் பொருள் வருவாய் ஆய்வரால் பறிமுதல் செய்யப்பட்டது.
  விசாரணைக்குப் பின் மனுதாரரிடம் குடும்ப அட்டை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
  வட்ட வழங்கல் அலுவலர்,
  பேரையுர்

 2. tsopermdu says:

  ‌‌பேரயூர் வட்டம் பழையூர் முகவரியைச் சேர்ந்த திரு.மா.செல்லையா என்பவரது குடும்ப அட்டையை பயன்படுத்தி வேறு நபர் பொருள் வாங்கியதன் காரணமாக மேற்கண்ட குடும்ப அட்டை குடிமைப் பொருள் வருவாய் ஆய்வரால் பறிமுதல் செய்யப்பட்டது.
  விசாரணைக்குப் பின் மனுதாரரிடம் குடும்ப அட்டை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
  வட்ட வழங்கல் அலுவலர்,
  பேரையுர்

 3. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட விநியோக அலுவலர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட விநியோக அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்