மனு எண்:

அனுப்புநர்: வெ.க.அழகுத்தேவன்,
2-246 இராசாசி வீதி,
தனக்கன்குளம்,
மதுரை-6

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

திருப்பரங்குன்றம் ஊராட்சிஒன்றியம் தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய பராமரிப்பிலுள்ள கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீட்டுமனைகளாக விற்பனை செய்வதற்கு அந்த ஊராட்சித்தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பினாமியாக செயல்படுவதை தடுத்து ஊராட்சி தலைவர் மற்றும் 9வது வட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரல்.

4 Responses to “நீர்நிலை-நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக”

 1. bdotpkmdu says:

  உயர்நீதி மன்றத்தில் தனக்கன்குளம் ஒன்றிய கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு கே. வடிவேலு என்பவரால் தொடரப்பட்டுள்ளது டபள்யூ . பி. எண் 1068 ஃ 2012 தேதி 27.1.2012 வக்கலத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையாக உள்ளதால் வழக்கு முடித்தபின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

  வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி)
  திருப்பரங்குன்றம்

 2. bdotpkmdu says:

  கடந்த 24.12.2011 அன்று ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அலுவலருடன் சென்றபோது மழை பெய்ததால் வேறுஒரு நாளில் ஆக்கிரமிப்பு எடுக்க முடிவு எடுக்கப்பட்டு 10.2.2012 அன்று ஆக்கிரமிப்பு எடுக்க நடடவடிக்க மேற்கொள்ளபடும் என தெரிவித்துக் கொள்கிறேன்

  வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி)
  திருப்பரங்குன்றம்

 3. madurai says:

  தங்களது மனு தொடர்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது

 4. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை/ஊரக வளர்ச்சித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்