அனுப்புநர்: செ.சின்னதாய்,
க.பெ.செல்வராஜ்
சந்தைபேட்டை 6வது வார்டு,
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம்
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
ஏற்கனவே தரப்பட்ட மின் இணைப்பினை துண்டித்து விட்டதால் வீட்டில் குழந்தைகள் படிக்க இயலவில்லை. எனவே மீண்டும் மின் இணைப்பு பெற்றுத்தரும்படி கோருதல்.
தங்களின் மின் இணைப்பு மற்றும் வீட்டு முகவரியின் தெளிவான விபரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேற்பார்வைப் பொறியாளர், கிராமம்/தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொறியாளர், கிராமம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
– மதுரை மாவட்ட ஆட்சியர்