மனு எண்:

அனுப்புநர்: க‌.சின்னராசு த/பெ கருப்பையா து.கிருஷ்ணாபுரம்[po]சாப்டூர்[வழி]பேரையூர்[tk]மதுரை[dt].pin.625705.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்,துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வே எண் 292-2uலில் உள்ள4.ஏ.10செ என்னுடைய இடத்திற்கு இலவச‌மாக போர் போட்டு மோட்டார் மாட்டி கொடுக்குமாறு[நிலவளவங்கி மூலம்]மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

3 Responses to “நிலவள வங்கி மூலம் இலவச போர் மோட்டார் கேட்டல்”

 1. jrcoopmdu says:

  பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டி நாயக்கனுார் ஊராட்சி உட்கடை து. கி்ருஸ்ணாபுரத்தில் உள்ள தங்களது நிலத்தில் இலவசமாக போர் போட்டு மோட்டார் மாட்டிக் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது நில வள வங்கியில் இலவசமாக போர் போட்டு மோட்டார்போட்டுத் தரும், திட்டம் ஏதும் இல்லைஎன்ற விபரம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

 2. agrimdu@tn.nic.in says:

  மனுதாரர் இலவசமாக ‌‌‌போர் போ‌‌ட்டு மோட்டார் மாட்டி ‌கொடுக்க வேண்டப்பட்டது தொடர்பாக வேளாண்துறை மூலம் நடவடிக்‌கை எடுக்க இயலாத சூழ்நிலையில், இது தொடர்பாக மனுதாரர் இ‌‌ை‌ண பதிவாளர் கூட்டுறவு சங்கம் அவர்களை தொடர்பு கொண்டு பயன்‌ பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

 3. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வேளாண் இணை இயக்குநர்/வேளாண்மை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குநர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்