அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
காயாம்பட்டி கிராமம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு, குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராம பொதுமக்கள் அளிக்கும் மனு.எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடஇனமக்கள் மட்டும்குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு கிலோமீட்டரில் உள்ள குலமங்கலம் கிராமத்திற்கு வயல் வரப்புகளில்சிரமப்பட்டுவாங்கிவரவேண்டியுள்ளதால் எங்களது கிராமத்திற்கு பகுதி நேர நியாய விலை கடை அமைத்துத் தரமாறு வேண்டுதல் மற்றும் நியாய விலை கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டிதர கோருதல்.
மனு எண்ஃ 7148 காயம்பட்டி கிராமத்தில் புதியதாக பகுதிநேர நியாயவிலைக்கடை தொடங்குவதற்கு வாடகையின்றி ்இலவசமாக கட்டிடம் வழங்க யாரும் முன்வராத காரணத்தினால் பகுதிநேர நியாயவிலைக்கடை ஆரம்பிக்க இயலவில்லை. இலவசமாக கட்டிடம் வழங்கும்பட்சத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை ஆரம்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இணைப்ப்திவாளருக்காக(கூட்டுறவு)
பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விபரங்கள் பெற்றுக்கொள்ளுமாறு மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வட்டாட்சியர் (கு.பொ)
மதுரை வடக்கு வட்டம்.
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட விநியோக அலுவலர்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட விநியோக அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
– மதுரை மாவட்ட ஆட்சியர்