மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
நரசிங்கம் கிராமம்,
நரசிங்கம் ஊராட்சி,
மதுரை கிழக்கு ஒன்றியம்
மதுரை மாவட்டம்-625107.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஒத்தக்கடை மின்பகிர்மானத்திற்கு உட்பட்ட நரசிங்கம் ஊராட்சியில் பழுதான தெருவிளக்குகள் மின்கம்பத்தில் பொருத்துவதில் மிகுந்த காலதாமதம் ‌ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தால் தெருவிளக்குகள் பழது சரிசெய்யப்பட்டு தயார்நிலையில் உள்ள நிலையிலும் மின்கம்பத்தில் மாட்டுவதற்கு வயர்மேன் வருவதில்லை. உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கும்போது, தெருவிளக்குகள் மின்கம்பத்தில் மாட்டுவது எங்கள் துறையின் பணி இல்லை என்றும் பணியாளர்கள் இ‌ல்லை என்றும் தெரிவிக்கிறார். எனவே தெருவிளக்குகளை உரிய காலத்தில் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2 Responses to “தெருவிளக்குகள் பொருத்துதல் சம்பந்தமாக”

  1. superintending engineer medc says:

    ஒத்தக்கடை மின்பகிர்மானத்திற்கு உட்பட்ட நரசிங்கம் ஊராட்சியில், ஊராட்சி எலக்ட்ரீசியன் மற்றும் மின் வாரிய பணியாளர்களைக் கொ ண்டு பழுதான தெருவிளக்குகள் மின்கம்பங்களில் தற்சமயம் மாற்றப்பட்டு வருகின்றன.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேற்பார்வைப் பொறியாளர், கிராமம்/தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொறியாளர், கிராமம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்