- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

தடையில்லா மின்சாரம் வேண்டி.

மனு எண்: தொடுவானம்/7093/03/09/2011
துறை: அனைத்து துறைகள்,செயற் பொறியாளர் - மின்சாரம் - கிராமம்
கிராமம்:

அனுப்புநர்: ப.குரு,
5/3, கத்தப்பட்டி,
சிட்டம்பட்டி அஞ்சல்,
வெள்ளரிப்பட்டி ஊராட்சி,
மேலுார் வட்டம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வணக்கத்திற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எங்களது கிராமம் வெள்ளரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கத்தப்பட்டி உட்கடை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே P.W.D. அலுவலகம் பின்புறமுள்ள குடியிருப்பில் வரும் மின் இணைப்பு Transform-ல் அடிக்கடி Fuse பழுதடைந்துவிடுகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்சாரம் தடைபடும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கு நரசிங்கம்பட்டி மின்பகிர்மான வட்டத்திலிருந்து மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. எங்களது ஒரு பகுதி மின்சாரம் தடைபட்டால் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரும் ஏற்ற முடியவில்லை. இதன் காரணமாக ஒட்டு மொத்த கிராமமும் பாதிப்படையும். இந்த மனுவினை ஏற்று தொடர்ந்து மின்சாரம் வழங்கிட ஏதுவாக நடவடிக்கை எடுத்திட மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
ப.குரு (கிராம பொது மக்கள் சார்பாக)
கத்தப்பட்டி,
வெள்ளரிப்பட்டி ஊராட்சி,
மேலுார் வட்டம்,
மதுரை மாவட்டம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "தடையில்லா மின்சாரம் வேண்டி."

#1 Comment By madurai On September 10, 2011 @ 11:00 am

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேற்பார்வைப் பொறியாளர், கிராமம்/தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொறியாளர், கிராமம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

– மதுரை மாவட்ட ஆட்சியர்

#2 Comment By superintending engineer medc On October 1, 2011 @ 1:13 pm

கத்தம்பட்டி கிராமத்தில் P.W.D. அலுவலகம் பின்புறமுள்ள மின்மாற்றியில் அடிக்கடி பழூது ஏற்பட காரணமான மரக்கி‌ளைகள் 14.09.2011 அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/7093/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.