அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,து.கிருஷ்ணாபுரம்,மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை கிராமம் து.கிருஷ்ணாபுரத்தில் இருந்து பாளையத்து அம்மன் கோயில் வரை ஓரடுக்கு சரளை மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது[2k.m.தூரம்].இதன் பிரிவு பெரிய ஓடையில் இருந்து பாண்டித்தேவர் தோட்டம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சின்னராசுத்தேவர் ஊரணி மற்றும் காடு வரை புதிய ஓரடுக்கு சரளை மண் சாலை அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு குக்கிராமங்கள் அடிப்படை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சர்வே பணி நடைபெற்று வருகிறது. சர்வே பணி முடிவு பெற்ற பின் அரசிடமிருந்து உரிய நிதி வர்பெற்றவுடன் ஓரடுக்கு மெட்டல் மண் சாலை அமைக்கப்படும்
தங்களது மனு தொடர்பாக ஊராட்சி தலைவர் மூலம் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஐ தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை/ஊரக வளர்ச்சித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
– மதுரை மாவட்ட ஆட்சியர்