மனு எண்:

அனுப்புநர்: எஸ். சுப்பிரமணியன்
1/355-5 தாமிரபரணி மெயின் தெரு (கிழக்கு)
1 வது வார்டு, ஸ்ரீ நகர், நாகனாகுளம் ஊராட்சி
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். முறையாக வீட்டு வரி கட்டி வருகிறேன். என் வீட்டு அருகாமையில் மின் கம்பம் இல்லை. ஆகையால் ஒரு தொலைவுக்கு அப்பாலிருந்து மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி மின் தொய்வு உண்டாகி குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் உபகரணங்கள் பழுதாகின்றன.
ஆகையால், தாங்கள், தயவுகூர்ந்து, மேல் ஆய்வு நடத்தி உரிய தொலைவில் மின் கம்பம் அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

4 Responses to “மின் கம்பம் அமைத்து அருள வேண்டி விண்ணப்பித்தல்”

 1. semdu says:

  பொதுவாக அனைத்து மின் இணைப்புகளும் 50மீ தூரம் வரை அருகில் உள்ள் மின் கம்பத்திலிருந்து மட்டுமே இணைப்பு வழங்கப்படும்.எனவே கூடுதல் மின் கம்பம் தங்களது விருப்பத்தின் பேரில் அமைக்கப்பட வேண்டும் எனில்,DCW மனுதாரர் பங்களிப்பு திட்டத்தின் கீழ் தாங்கள் உரிய மதீப்பீட்டு தொகையை செலுத்தும் பட்சத்தில் மட்டுமே அமைக்க இயலும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

 2. semdu says:

  மனுதாரரின் அனுமதி்யின்றி மனுதாரருடைய சொந்த பட்டா இடத்தின் வழியாக மின் கம்பிகளை வேறு இடத்திலிருந்து மாற்றியமைக்கப்படாது என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

 3. madurai says:

  தங்களது மனு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உதவிப்பொறியாளரை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 4. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர், ஊராட்சிகள்/ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சிகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநர், ஊராட்சிகள் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்