மனு எண்:

அரசாங்க வேலை கேட்டு

அனுப்புநர்: ஏ. அப்தாஹீர் பாட்சா
எண்- 23 நாளாங்காடித்தெரு
மேலூர்
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேலூரில் வசித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைப் படித்து உள்ளேன். நான் நடத்துனர் உரிமம் பெற்று அதையும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். எனக்கு 38 வயது முடிந்து விட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் என் மீது கருணை கொண்டு ஏதாவது ஒரு வேலை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஏ. அப்தாஹீர் பாட்சா
எண்- 23 நாளாங்காடித்தெரு
மேலூர்
மதுரை

2 Responses to “அரசாங்க வேலை கேட்டு”

  1. madurai says:

    மனுதாரின் கல்வித்தகுதி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுமூப்பு அடிப்படையில் மனுதாரரின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
    உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,மதுரை

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்/மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்