மனு எண்:

அனுப்புநர்:
‌‌பெ.சந்தானம்
த-பெ .பெரியசாமி (‌‌லே ட்)
4-1-19-9, அன்பு நகர், எஸ்.ஆலங்குளம்,
ஆனையுர் அஞ்சல்
மதுரை -17

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ஆதிதிராவிடர் பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவன். நான் கடந்த 20.11.78-ல் மேலுாரைச் சேர்ந்த கருத்தப்புளியம்பட்டி உடையான் செட்டியார் மகள் பாக்யம் என்ற பெண்ணை நத்தம் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பதிவு செய்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். அதன் மூலம் கலப்பு திருமணம் சலுகை பெற மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 26.7.1979-ல் தங்க பதக்கம் மற்றும் ஐயாயிரம் ரூபாய் டிபாஸ்சிட் சலுகைகள் தமிழ்நாடு அரசுமூலமாக முன்னாள் மாண்புமிகு.தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.ஆகவே அய்யா அவர்கள் கலப்பு திருமண சான்றிதழ் வழங்க மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலகத்திற்கு உத்திரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

4 Responses to “கலப்பு திருமணம் சான்றிதழ் வழங்குவது சார்பாக”

 1. tahmnmdu says:

  ந.க.எண்.ஆ2-1701-12 நாள்:10-02-2012 கேரரிக்கை தள்ளுபடி. மனுதாரர் கலப்புத் திருமணம் செய்தது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகச் சான்று மற்றும் இருவரது சாதிச்சான்றுதழ்கள் ஆகியவற்றை விசாரணையின்போது சமர்பிக்கவில்லை.

 2. dadwomdu says:

  மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்படவேண்டும்

 3. sivakumar says:

  மனுதாரர் நேரி்ல் மதுரை மாவட்ட சமுகநல அலுவலகத்தை அனுகி விபரம் அறிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

  மாவட்ட சமுகநல அலுவலர்.மதுரை

 4. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலர்/மாவட்ட சமூக நல அலுவலகம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்