மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அல்லிகுண்டம் கிராமம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அல்லிகுண்டம் கிராமத்தில் மின்மாற்றி பழுதாகி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் குடிநீர் மோட்டார் இயங்காமல் குடிநீர் கிடைக்காமலும். தெருவிளக்குகள் எரியாமலும் உள்ளது. எனவே சமூகம் அவர்கள் மேற்படி மின்மாற்றியை பழுதுநீக்கம் செய்துதரவேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறோம்

2 Responses to “மினமாற்றி பழுது நீக்கம் செய்து தர கேட்டல்”

  1. aeepromdu says:

    அய்யா,
    தங்களது கிராமத்தின் பழுதடந்த மின்மாற்றி மாற்றப்பட்டு புதிய மின்மாற்றி நிறுவபட்டுள்ளது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேற்பார்வைப் பொறியாளர், கிராமம்/தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொறியாளர், கிராமம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்