மனு எண்:

கூடுதலாக நியாய விலைக்கடை வேண்டுதல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்
செங்கப்படை கிராமம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்களது ஊரில் சுமார் 1258 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.ஆனால் ஒரே ஒரு நியாயவிலைக்கடை கடைதான் உள்ளது.அக்கடையில் ‌அனைவரும் சென்று குடிமைப்பொருள்
வாங்குவதஙற்கு மிகவும் சிரமமாக உள்ளது ஆதலால் கூடுதலாக ஒரு நியாய வி‌லைக்கடை அமைக்க உத்திரவு இடுமாரு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
ஊர் பொதுமக்கள்

4 Responses to “கூடுதலாக நியாய விலைக்கடை வேண்டுதல்”

 1. jrcoopmdu says:

  தனி அலுவலரின் அறி்க்கை வரப்பெற்றதும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறப்பட்டு நியாயவிலைக்கடை திறக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கி‌றேன்.

  Reply

 2. jrcoopmdu says:

  தனி அலுவலரிடம் பி‌ரேரணை கோரப்பட்டுள்ளது. பி‌ரேரணை வரப்பெற்றதும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறப்பட்டு நியாயவிலைக்கடை திறக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கி‌றேன்.

 3. District Supply Office says:

  கூடுதல் நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்று அதன்படி மனுவினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  மாவட்ட வழங்கல் அலுவலகம்
  மதுரை

 4. madurai says:

  தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்,திருமங்கலம்/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்,திருமங்கலம் அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

  – மதுரை மாவட்ட ஆட்சியர்