மனு எண்:

அனுப்புநர்: ராமானுஜம். சீ,
தலைவர்,
‌செங்கப்படை ஊராட்சி,
கள்ளிக்குடி ஊ.ஒ,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

ஐயா,
ஊராட்சிகளில் காண்ட்ராகடர்கள் மூலம் போடப்படும் சிமெண்ட் சாலைகள் ஓரிரு ஆண்டுகளில் சிமெண்ட் மேற்பரப்பு பெயர்ந்து கற்சல்லிகள் கால்களை பதம் பார்க்கின்றன.

ஆகையால் சிறிது செலவு அதிகமானாலும் பேவர்ஸ் ப்ளாக்குகள் மூலம் இடப்பட்டால் உறுதியாகவும் பார்ப்பதற்கு
‌நேர்த்தியாகவும் இறுக்கும் . மேலும் ‌ஏதாகிலும் ஒன்று பழுது
பட்டாலும் அதைமட்டும் மாற்றி எளிதாக பழுது பார்க்கலாம்.

முனிசிபாலிடி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றின் தெ
ருக்களைப்போல் எங்களது தெருக்களும் பளபளபப்புடன்
காணப்படும் என நம்புகி‌றேம்.

2 Responses to “‌தெரு சிமெணட் சாலைகள் பேவர்ஸ் ப்ளாக் மூலம் இடுதல்-தொடர்பாக”

  1. bdokalmdu says:

    ஊராட்சிகளி்ல் காண்ட்ராக்டர்கள் மூலம் போடப்படும் சிமி்ண்ட் சாலைகளில் இனி வரும் காலங்களில் ஊராட்சிகளின் நிதி வசதிக்கேற்ப சிமிண்ட் சாலைகளுக்கு பதிலாக பேவர்ஸ் ப்ளாக்குகள் அமைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  2. madurai says:

    தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக /அனைத்து துறைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

    – மதுரை மாவட்ட ஆட்சியர்