மனு எண்:

அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
பெரியகட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வசித்துவருகிறேன். மதுரை பேரையுா் தாலுகாவிலுள்ள பெரிய கட்டளையில் கூட்டு குடிநீா் பைப் உள்ளது.அந்த பைப் சின்னக்கட்டளை கிராமத்தில் இருந்து பெரிய கட்டளை கிராமத்திற்கு செல்லும் பைப்பில் இருந்து துரைச்சாமி ரைஸ்மில்லுக்கு தனிப்பட்ட முறையில் பைப்பிலிருந்து மோட்டார் அமைத்து வீட்டின் மேல்மாடியில் தொட்டி அமைத்து நீரை எடுத்து தொழிற்சாலைக்கு மற்றும் வீட்டிற்கு நீரை உபயோகப் படுத்துகிறார்கள். ஆகவே ஐயா அவா்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்துத்தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஊா் பொதுமக்கள் சார்பாக.

Leave a Reply

You must be logged in to post a comment.