மனு எண்:

அனுப்புநர் :
எஸ். சந்திரசேகரன்,
மற்றும் 92, கண்ணதாசன் தெரு பொதுமக்கள், அண்ணாநகர்,
மதுரை – 20.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நாங்கள், மதுரை அண்ணாநகரில் 92, கண்ணதாசன் தெருவில் குடியிருந்து வருகின்றோம். எங்களது பகுதியில் உள்ள அனைவரும் அரசுப்பணி, பிற தனியார் துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளதனால் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றோம். எங்களது தெருவில் குடிநீர் வசதி சரிவர கிடைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை.எனவே போதிய குடிநீர் வசதி கிடைக்க ஆவன செய்ய வேண்டுகின்றோம். வசதியின்றி சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற காரணத்தினால் ஆங்காங்கே சாக்கடை நீர் பெருகி தேங்கி நிற்பதுடன், மழை நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி விடுகின்ற காரணத்தினால் கொசு போன்ற கொடிய விஷமுடிய ஜந்துக்கள் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பல்வேறு விதமான தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. எனவே, உடனடியாக தேங்கியுள்ள கழிவு நீர்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டுகின்றோம். மேலும், வீட்டுக்கழிவுகளை கொட்ட வசதியில்லாத காரணத்தினால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளினால் தொற்று நோய் பரவும் அபாயமாக உள்ளது. எனவே, உடனடியாக எங்கள் பகுதியில் அவசர அத்தியாவசியத்தினை முன்னிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.