- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

வரைபட நகல் (FMB-COPY) பெறுவது தொடர்பாக

மனு எண்: தொடுவானம்/10052/13/06/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர், மதுரை தெற்கு.
கிராமம்: ,தணக்கன்குளம்

அனுப்புநர்: வி.ஜி.ராம்தாஸ்,
166E, அழகர் கோவில் ரோடு,
K.M.S.L.காலனி,
மதுரை-625002.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா,
நான் தொடுவானதில் 19-4-2012 அன்று புகார் மனு செய்தேன் மனு எண் 9520. அந்த மனுவிற்கு 6-5-2012 அன்று மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வரைபட நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.என்று பதில் வந்தது. ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.இது சம்பந்தமாக பலமுறை நேரில் சென்று கேட்டபோது சர்வே பிரிவில் உள்ள உதவியாளர் திருமதி.காமாட்சி என்பவர் வடடாட்சியர்-யை கேள், முதன்மை சர்வேயர்-யை கேள் என்றும், தொடுவானத்திடம் போய் கேள் என்றும் மரியாதை குறைவாக பேசி, அலைக்கழித்து வரைபட நகல் தர மறுக்கிறார். அகவே சமுகம் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு வரைபட நகல் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வரைபட நகலை மேற்கண்ட எனது முகவரிக்கு தயவு செய்து தபால் மூலம் அனுப்பி வைக்குமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வி.ஜி.ராம்தாஸ்


1 Comment (Open | Close)

1 Comment To "வரைபட நகல் (FMB-COPY) பெறுவது தொடர்பாக"

#1 Comment By tahmsmdu On June 28, 2012 @ 10:16 am

மனுதாரர் கோரியபடி புலப்பட நகல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிட்டது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/10052/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-fmb-copy-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.