மனு எண்:

அனுப்புநர்: வெ.முருகன் த/பெ. வெள்ளைச்சாமி
மறவர்பட்டி ராஜக்காள்பட்டி ஊராட்சி
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. நான் மேலே கண்ட முகவர்யில் வசித்து வருகிறேன். நான் வாடிபட்டி டி. ஆண்டிபட்டி பங்களாவில் ஸ்ரீ கிருஸ்ணா வெல்டிங் ஒர்க்ஸ் நடத்தும் பவர் குட்டி என்ற ராஜசேகரன் என்பவர் டிராக்டர் டிப்பர் மற்றும் கலப்பை செய்து கொடுக்க ருபாய் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு எந்தவித டிப்பரோ அல்லது கலப்பையோ செய்து தரவில்லை. இது சம்பந்தமாக நான் கடந்த 4-3-2012ல் மதுரை மாவட்ட காவல்துறையில் வந்த மனு மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுத்து எனக்கு கிடைக்க வேண்டிய பணமோ டிப்ப்ரோ, கலப்பையோ கிடைக்கவிலை. மற்றும் நான் தொடுவானம் மூலமாக 23.4.2012 மனு செய்த்ள்ளேன். அதற்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவே சமுகம் அவர்கள் பணம்மோசடி செய்த குட்டி என்ற ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பனத்தை வாங்கித் தரும்படி மிகப் பணிவுடன் கேட்டுக்கொளிகிறேன்.

One Response to “பணம் மோசடி செய்ததை விசாரனை செய்து நீதி வழங்க வேண்டி மனு.”

  1. spmdu says:

    G3/27544/39/2012 நாள் 07.08.2012 இம்மனு மீதான விசாரணையில் இருதரப்பினரையும் விசாரணை செய்ததில் மனுதாரர் எதிர்மனுதாரரிடம் ஏற்கனவேமன பெற்ற பணம் போக மீதம் கொடுக்க ‌வேண்டிய பணம் ரூபாய் 11500/- ஜீலை மாதம் 10-ந் தேதி ரூபாய் 5000/-மும் மீதப்பணம் ரூபாய் 6500/- ஐ ஆகஸ்டு மாதமும் தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்துள்ளார். அதனை மனுதாரரும் ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூபாய் 4500/- ‌ஐ 10.07.12-ல் பெற்றுள்ளார். மீதப் பணத்தை ஆகஸ்டு மாதம் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளார். எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது .
    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.

Leave a Reply

You must be logged in to post a comment.