மனு எண்:

புளியமரத்தை அகற்ற வேண்டி

அனுப்புநர்: கிராம நிர்வாக அலுவலர்,
அம்பலக்காரன்பட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உயர்திரு நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் மேலூர் . அவர்களுக்கு 77, அம்பலகாரன்பட்டி கிராம நிர்வாக அலுவல‌ரால் பணிந்து அனுப்பப்படுகிறது.
மேலூர் வட்டம் .77. அம்பலகாரன்பட்டி உட்கடை கோட்டநத்தம்பட்டி கிராமம் மேலூர்-சிவகங்கை சாலையில், மேற்குபுறம் உள்ள, 7ம் எண் கொண்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்றில் தீ உட்புறமாக எரிந்து கொண்டிருந்தது . இது குறித்து உடனே மேலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்ப‌ட்டு தீயணைப்பு துறையால் தீ அணைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் புளியமரத்தின் வேர்ப்பகுதி மற்றும் நடுப்பகுதி முற்றிலும் சேதமடைந்துவிட்டது. புளியமரம் காற்றில் எப்போது வேண்டுமானலும் சாய்ந்துவிடக்கூடிய நிலையில் உள்ள்து. புளியமரத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மேலூர்-சிவக‌ங்கை சாலையில் போக்குவரத்து(எஜ் ஹைச்.31)உள்ளது.புளியமரத்தைஉடனே அக‌ற்ற கோரி பொதுமககள் மனு செய்துள்ளனர்.ஆகவே பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் ப‌ள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள பளிமரத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
கிராம நிர்வாக அலுவலர் ,
அம்பலகாரன்பட்டி.

Leave a Reply

You must be logged in to post a comment.