மனு எண்:

இலவச வீடு கட்டித்தர கோருதல்

அனுப்புநர் :

பி. சுசிலா

கஃபெ. பால்சாமி மற்றும் 44 நபர்கள்

அய்யப்பநாயக்கன்பட்டி
குருவித்துரை அஞ்சல்
வாடிப்பட்டி தாலுகா
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த மக்களாகிய நாங்கள் வாடிப்பட்டி தாலுகா அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் 2007ஆம் வருடத்தில்  மன்னாடிமங்கலம் கிராமத்தில்  இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கி உள்ளோம். ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு இலவச வீடு கட்டித் தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அய்யா அவா்கள் நாங்கள் குடியிருக்க ஏதுவாக எங்களுக்கு விரைவில் இலவச வீடு கட்டித் தருமாறு மிக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் நம்பிக்கையுள்ள
ஊா்பொதுமக்கள்
(ஆதிதிராவிடா்கள்)

One Response to “இலவச வீடு கட்டித்தர கோருதல்”

  1. bdovadmdu says:

    ஒரே ஊராட்சியில் சுமார் 45 நபர்களுக்கு உடனடியாக இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் அளவுக்கு தற்போது நிதிஆதாரம் ஏதும் ஊராட்சியில் இல்லை.
    மேலும் வீட்டுமனைப் பட்டாவும் ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட இடத்தில் மனுதாரர்களே அவர்களுக்கு வசதிப்படும் விதத்தில் வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற விபரம் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.