மனு எண்:

வேலை வாய்ப்பு கோரி எவரும் "தொடுவானம்" தளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டாம்

மனுக்கள் குறித்த புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2672  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:91  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:60  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2521  

அன்பார்ந்த பொதுமக்களே,

தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக மதுரை மாவட்டம்
திகழ அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற இந்த “தொடுவானம் – மதுரை மாவட்ட ஆட்சியர்” வலைப்பூவை மலர விடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தமிழக முதல்வர் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக மாவட்ட நிர்வாகம் திகழ ஒத்துழைப்பு வேண்டும்.

இந்த வலைப்பூவில் உங்கள்

  • குறைகள்/புகார்கள்
  • ஆலோசனைகள்

ஆகியவற்றை அந்தந்தப் பக்கங்களில் தெரிவிக்கலாம். தாங்கள் தெரிவிக்கும் குறைபாடுகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தன்னார்வலராக பங்களிக்க விரும்புவோர் “தன்னார்வலர்களே” என்ற பக்கத்தில் தங்கள் விவரங்களை தரலாம். இதர கருத்துக்களை “எம்மைப் பற்றி” பக்கத்தின் கீழ் பதியுங்கள்.


இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்பும்


உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
மதுரை மாவட்டம்.

Comments are closed.